
இன்றைய காலகட்டத்தில் உடலையும், சருமத்தையும் பாதுகாக்க ஆகும் செலவு மிக அதிகம், குறிப்பாக பெண்கள் தங்களது முக வசீகரத்தையும், அழகையும் பாதுகாப்பதற்காக தங்களது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை செலவழிக்கின்றனர்.
அவ்வாறு செலவழித்து அழகு சாதனப் பொருட்களை வாங்கினாலும் பெரும்பாலானவை அதிகப்படியான கெமிக்கல் சேர்க்கையில் தயாரிக்கப்பட்டதாகவே இருப்பதால் சருமத்திற்கு அதிகப்படியான தீமைகளை விளைவிப்பதாகவே உள்ளது.
தொடர்ந்து கெமிக்கல் அழகு சாதனங்களை பயன்படுத்தும்போது குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதை பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் தோற்றப் பொழிவு இழந்து சருமம் மற்றும் முகத்தில் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இவற்றை உணர்ந்து தற்போது அதிகப்படியான ஆண்கள் மற்றும் பெண்கள் இயற்கை அழகு சாதனத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆனாலும், முழுமையான இயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது.
மேலும் இன்றைய தலைமுறையினருக்கு, முக்கிய பிரச்னையாக இருப்பது முகப்பரு. சிலர், பருக்களை கிள்ளி விடுவதால், அந்த இடத்தில் பரு இருந்ததற்கான அடையாளம் அப்படியே இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வை தருகிறது,
இன்னும் சிலருக்கு வியர்வை துர்நாற்றம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு, நிறைய பேர் செயற்கை வாசனை பொருட்களை உபயோகிக்கின்றனர். கை இடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது, சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கி அதுவே பெரிய தொந்தரவை கொடுத்து விடும். வெயில் சுட்டெரித்தால், வெளியில் செல்லவே பயப்படுவர்.
மேலும் சருமத்திற்கு பயன்படுத்தும் மற்ற அழகு சாதனப் பொருட்களால் அலர்ஜி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால், நலங்கு மாவு பயன்படுத்தும்போது, யாருக்கும் அலர்ஜி ஏற்படாது, நலங்கு மாவு அனைத்து சருமத்தையும் காக்கும் இயற்கை வரப்பிரசாதம் மேலும் சருமம் வறண்டு போகாமல், ஈரப்பதத்துடன், பொலிவாக இருக்கும். பாசிப்பருப்பு, வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, பச்சரிசி, கடலைப்பருப்பு போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதே நலங்கு மாவு.
இந்த நலங்கு மாவை சருமத்துக்குப் பயன்படுத்தும்போது அழுக்கு சேர்வதால் வரும் சொறி, சிரங்கு பாதிக்காது. இயற்கையான மணமூட்டிகள் இருப்பதால் வியர்வை வாடை வராது.
குளிர்ச்சி உண்டாக்கும் பொருள்கள் சேர்க்கப்படுவதால், வியர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவை வராது. தொடைகள் உரசி, கருத்துப்போவதோ, புண்ணாவதோ தவிர்க்கப்படும். எனவே, கோடைக்காலத்துக்கு இது மிகவும் ஏற்றது.
பெண் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே இதை பயன்படுத்தினால் அவர்கள் சருமம் மிகப் பொலிவடையும்..
நலங்கு மாவு. நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.
நலங்குமாவை பயன்படுத்தி, வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு, நலங்கு மாவை தேய்த்து குளிக்க வைப்பதால், அவர்களின் சருமம் பாதுகாக்கப்படுகிறது.
நலங்கு மாவில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது.
நலங்கு மாவை உபயோகிப்பது, பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள், எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட நலங்கு மாவை தற்போது ஒரு சில பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பவர்கள் அதிகப்படியாக இருந்தாலும் நமது gsspecialfood.com சார்பில் தயாரிக்கும் நலங்கு மாவில் அதிகப்படியாக 35 வகையான மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கிறோம்.
இந்த மூலிகைகளில் ஒருசில அரிதானதாக இருந்தாலும், ஒருசிலரின் உதவியால் மலைப்பிரதேசங்களில் இருந்து பெறப்பட்டு தரமானதாக தயாரிக்கிறோம்.
வெட்டிவேர்,
பாசிபயிர்,
கடலைப்பருப்பு,
முந்தானைமெட்டி,
கஸ்தூரி மஞ்சள்,
பூலங்கிழங்கு,
வசம்பு,
கோரைக் கிழங்கு,
ஆவாரம்பூ,
மகிழம்பூ,
பன்னீர் ரோஜா,
மாதுளை பழத் தோல்,
எலமிச்சை பழத் தோல்,
ஆரஞ்சு பழத் தோல்,
கார்போட் அரிசி,
மாசிக்காய்,
பாதாம்,
செரும்பருத்தி,
மங்குஸ்தான் தூள்,
பச்சைஅரிசி,
சந்தனக் கட்டை,
மைசூர் பருப்பு,
உ..பருப்பு,
வெந்தயம்,
நீட்டு மஞ்சள்,
சோத்து கத்தாழை,
வள்ளாரை கீரை,
வேப்ப இலை,
ஆளிவிதை,
குப்பைமேனி இலை,
கருவேப்பிலை,
கசகச,
குண்டு மஞ்சள்,
தாழம்பூ இதழ்
போன்ற 35 மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் நலங்கு மாவு பெண்கள் மட்டும் பயன்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்படுகிறது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே இதைப் பயன்படுத்தலாம், காரணம், இதில் 3 வகையான மஞ்சள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் ஆண்கள் பயன்படுத்த ஏற்றதல்ல.