
மூட்டு தேய்மானம், எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு வலிகளைப் போக்கி இரும்பை போன்று உடலை பாதுகாக்கும் கருப்பு உளுந்து கஞ்சி மாவு
உளுந்து என்றாலே சத்துக்கள் நிறைந்த, எலும்புகளை காக்கும் கவசம் என்ற காரணத்தால்தான், நமது பாரம்பரிய உணவு வகைகளான, இட்லி, தோசை, வடை போன்றவற்றில் உளுத்தம்பருப்பை சேர்த்து வைத்தனர் நமது முன்னோர்கள்.
அதிலும் தோல் நீக்காத கருப்பு உளுந்தில் ஏகப்பட்ட நன்மைகள் இருந்ததால்தான், அந்த உளுந்தைப் பயன்படுத்தி வயதுக்கு வந்த பெண்களுக்கு கஞ்சி வைத்து கொடுத்தனர்.
அதிகப்படியான எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையை சந்திப்பவர்கள் பெண்கள், மென்மையான உடலையும், குடும்பத்திற்காக அதிகப்படியான பணிச் சுமையையும் அனுபவிப்பவர்கள் பெண்கள்.
இவர்கள் சத்தான உணவினை எடுத்துக்கொள்ளவில்லையென்றால், குறிப்பிட்ட வயதிற்கு பின் உடல் அளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துவிடக்கூடாது என்பதால், பெண்களுக்கு கருப்பு உளுந்தை அதிகப்படியாக பயன்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள்.
குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமத்தில் இருந்து தப்பிக்க, உளுந்தங்கஞ்சி பெரிதும் உதவுகிறது. மேலும் கருப்பையை வலுப்படுத்தவும் இது உதவுகிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த கருப்பு உளுந்து கஞ்சி மிகவும் பயன்உள்ளதாக திகழ்கிறது. உடல் எடை கூடவும், சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளை அகற்றவும், எலும்புகளை பலப்படுத்தவும் உளுந்தங்கஞ்சி மிகச் சிறந்த உணவாக திகழ்கிறது.
கருப்பு உளுந்து குளிர்ச்சியை அளிக்க கூடியது. உடலில் இருகும் நச்சு பொருள்களை நீக்குகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க செய்கிறது. இதனால் மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம்.
இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்கவும், ரத்த சோகையை தடுக்கவும். உடலுக்கு தேவையான நார்ச்சத்தை அதிகரிக்கவும், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நிறைவாக உள்ள உணவாக கருப்பு உளுந்து திகழ்கிறது.
இன்றைய கால கட்டத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி, சிட்டிங் ஜாப், அதாவது கணிணி முன்பு உட்கார்ந்து அல்லது எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக அலுவலக நாற்காலிகளில் உட்கார்ந்து பணி செய்வதால் அவர்களின் முதுகு எலும்பிற்கு அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகிறது.
மேலும் ஆண்கள், பெரும்பாலும் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் பயனிக்கும்போது அவர்களின் முதுகு எலும்பு டிஸ்க்குகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கவில்லையென்றால் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
இளம் வயதில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அவ்வளவாக வெளியே தெரியாத போதும், சிறிது வயதில் மாற்றம் அடையும்போது எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத போதும் வலி மெல்ல வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
உடல் சதையில் ஏற்படும் வலியைக் கூட பொருத்துக் கொள்லாம், ஆனால் எலும்பு சம்பந்தப்பட்ட வலியை அனுபவிப்பது வாழும் போதே நரகத்தில் வாழ்வதற்கு சமம்.
இதையெல்லாம் மனதில் கொண்டு தான் நமது முன்னோர் கருப்பு உளுந்து கொண்டு களி, கஞ்சி மற்றும் சாதம் போன்றவற்றை தயாரித்து தங்களது குடும்பத்தினரை ஆரோக்கிமாக பேணிகாத்தனர்.
ஆனால் தற்போது பணம் வாழ்வின் முக்கிய இடத்தை பிடிப்பதாலும், பணியின் நிமித்தமாகவும், ஆண்கள், பெண்கள் உறவுகளை தாண்டி பணி செய்ய நேர்வதால், அவர்களின் உடலுக்கு தேவையான உணவு வகைகள் கிடைப்பது அரிதாகிறது, அல்லது சத்தான உணவினை தயாரித்து சாப்பிடுவதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேருவதால், உடனடி உணவுவகைகளை நாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதுபோன்றவர்களுக்கு குறிப்பாக முதுகு எலும்பு தேய்மானத்தை அதிகம் எதிர்கொள்ளும் வகையில் பணி செய்பவர்களுக்காக நமது ஜி.எஸ்.ஸ்பெஷல் புட் சார்பில், முதல் தரமான கருப்பு உளுந்தை பயன்படுத்தி கருப்பு உளுந்து கஞ்சி மாவை தயாரித்துள்ளோம். இனிப்பு அல்லது உப்பு சேர்த்து எடுக்கப்படும் இந்த கஞ்சி உடலை இரும்பு போல் வைத்திருக்க உதவும்..
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 2டம்ளர்
gsspecialfood.com தயாரிப்பான கருப்பு உளுந்து சத்துமாவு - 2டீஸ்பூன்
பனங்கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை - இனிப்புக்கு
இனிப்பு விரும்பாதவர்கள் உப்பு - தேவையான அளவு
செய்முறை
கருப்பு உளுந்து கஞ்சி மாவை சிறிது தண்ணிரில் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்
இரண்டு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்கவைக்கவும், தண்ணீர் கொதித்தவுடன், கரைத்துவைத்துள்ள கருப்பு உளுந்த கஞ்சி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
மாவு பச்சை வாசனை போனபிறகு அதை இறக்கி சிட்டிகை உப்பு, பனங்கருப்பட்டி, சேர்க்கவும், இன்னும் அதிகப்படியான சுவை தேவையென்றால் வறுத்த நட்ஸ் வகைகளை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கிளறவும், அல்லது கஞ்சியின் மீது தூவிவிடவும்.
குறிப்பு
கணிணியில் தொடர்ந்து பணிபுரியும் ஆண், பெண்கள் அவசியம் எடுத்துக் கொள்ளவும்.
25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
தொடர்ந்து வாகனங்களில் பயணிக்கும் ஆண் பெண்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பின் முதுகு, டிஸ்க் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஆர்டர் செய்வது எப்படி மற்றும் விலை
gsspecialfood.com என்ற இணையதளத்தில் சென்று தேவைப்படும் பொருட்களை வாட்சப் செயலி வாயிலாக ஆர்டர் செய்யலாம்.
அல்லது 7550199561 என்ற வாட்சப் எண்ணில் மெசேஜ் செய்து பெற்றுக் கொள்ளலாம்
சென்னை 250 கிராம் ரூ 140 கொரியர் ரூ.20 மொத்தம் 160 ரூபாய்
தமிழ்நாடு முழுவதும் 250 கிராம் ரூ 140 கொரியர் ரூ.30, மொத்தம் ரூ.170
இந்தியா முழுவதும் 250 கிராம் ரூ 140 கொரியர் ரூ.40, மொத்தம் ரூ.180
வெளிநாடுமுழுவதும் ரூ 140 + ஒவ்வொரு நாட்டின் பார்சல் கட்டணம்