logo
home Product ஏப்ரல் 07, 2025
முடக்கத்தான்  கீரை இட்லி பொடி
article image
நிறம்

தென் இந்திய உணவில் இட்லி தோசை என்பது தவிர்க்க முடியாத உணவு பொருளாகும், இதற்கு குழம்பு, சட்னி போன்றவற்றை பயன்படுத்துவதை காட்டிலும் இட்லி பொடி பயன்படுத்துபவர்களே அதிகம்.

பொதுவாக இட்லிபொடி என்பது ஒரு சுவை மிகுந்த உணவு பொருள், இது தோசை மற்றும் இட்லியுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் அன்றாட உணவில் முக்கியத்துவம் வாய்ந்த இட்லி பொடியில் இன்னும் சத்து அதிகம் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதுதான் முடக்கத்தான் கீரை இட்லிபொடி.

சற்று கசப்பு சுவை தூக்கலாக இருந்தாலும், அந்த இயற்கையான கசப்புத் தன்மையில் பல்வேறு நன்மைகள் உள்ளது.

ஒருசில இட்லிபொடி தயாரிப்பு நிறுவனங்கள் அந்த கசப்பு தன்மையை மறைக்க பல்வேறு செயற்கை பொருட்களை பயன்படுத்தி கசப்பை குறைப்பார்கள். ஆனால் நமது gsspecialfood.com எந்தவித கெமிக்கல் பொருளையும் பயன்படுத்தாமல் அதே சமயம் இயற்கையாக உள்ள கசப்புத் தன்மையை அப்படியே பயன்படுத்தி முடக்கத்தான் கீரை இட்லி பொடி தயாரித்துள்ளது.

முடக்கத்தான் கீரையின் நன்மைகள் 

முடக்கத்தான் கீரை வீக்கத்து எதிரான குணங்கள் கொண்டது.

இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.

கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.

ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.

இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.

காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.

இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.

முடக்கத்தான் கீரை இலை அல்லது பொடியை கொதிக்க வைத்து பருகினால், அது வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

முடக்கத்தான் கீரை உடலில் சோர்வைப் போக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

முடக்கத்தான் கீரை சரும வியாதிகளுக்கு தீர்வாகிறது. தலையில் உள்ள பொடுகைப் போக்குகிறது. தலையின் அரிப்பை குணப்படுத்துகிறது. இதை அரைத்து தலைமுடியின் கால்களில் தடவினால் கூந்தலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த முடக்கத்தான் கீரையை அன்றாடம் பயன்படுத்தும் உணவான இட்லி பொடியில் சேர்த்து முடக்கத்தான் கீரை இட்லி பொடியை தயாரித்துள்ளது gsspecialfood.com 

சாதாரணமாக இட்லிப் பொடி என்பது மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு மற்றும் எள் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு அரைக்கப்படும் கலவை இட்லிப் பொடியாகும். இட்லிப் பொடி இட்லி மட்டுமின்றி, தோசை மற்றும் பிற தென்னிந்திய உணவு வகைகளுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் இட்லிப் பொடியானது, நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா , சீரகம், காய்ந்த மிளகாய், கல் உப்பு, பெருங்காய தூள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யலாம். அவ்வாறு செய்யும்போது இவற்றுடன் முடக்கத்தான் கீரையை அதிகப்படியாக சேர்த்து செய்ததுதான் இந்த முடக்கத்தான் கீரை இட்லி பொடி.

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சுவைத்து ஆரோக்கியம் பெறலாம்.

இந்த அற்புதமான முடக்கத்தான் கீரை இட்லிபொடியை 100 கிராம் 70 ரூபாய்க்கு தருகிறோம். முடக்கத்தான் கீரை இட்லி பொடி 100 கிராம் 70 ரூபாய், கொரியர் சார்ஜ் 20 ரூபாய் மொத்தம் 90 ரூபாய்

மேற்கண்ட பொருள்கள் தேவைப்படுபவர்கள், 75501 99561 என்ற மொபைல் எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்பி அதற்குறிய தொகையை ஜி பே, போன் பே போன்ற ஆப் மூலம் அனுப்பி, தங்களது முகவரியுடன் அனுப்பிவைத்தால் மேற்கண்ட பொருள் உங்கள் வீட்டிற்கு கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும்.