logo
home Product ஏப்ரல் 07, 2025
வல்லாரை கீரை இட்லி பொடி
article image
நிறம்

பொதுவாக இட்லிபொடி என்பது ஒரு சுவை மிகுந்த உணவு பொருள், இது தோசை மற்றும் இட்லியுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் அன்றாட உணவில் முக்கியத்துவம் வாய்ந்த இட்லி பொடியில் இன்னும் சத்து அதிகம் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதுதான்  வல்லாரை கீரை இட்லி பொடி.

வல்லாரைக் கீரையில் அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும், அதன்படி அதில் உள்ள ஒருசில நன்மைகளைப் பார்ப்போம்.

‘சத்துக்கள் நிறைந்த தாவரங்களில் ஒன்றாக இருப்பது ஆரை வகைகள். இந்த ஆரைகள் மூன்று வகைகளாக, அதாவது ஆரை,புளியாரை மற்றும் வல்லாரை என சிறந்த கீரைகளாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இந்த வல்லாரை கீரையில் அனைத்து நன்மைகளும் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை என்ற பெயரை பெற்றதாக முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர்.

வல்லாரையில் இருக்கும் சத்துக்கள்:

இரும்புச்சத்து

சுண்ணாம்புச்சத்து

வைட்டமின் A

வைட்டமின் C

தாது உப்புக்கள்

வல்லாரை நன்மைகள்:

ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது

வல்லாரை கீரையுடன், சிறிதளவு பாதம், ஏலக்காய், மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து தினமும் காலை மற்றும் மாலை பாலில் கலந்து குடித்தால் இதயம் தொடர்பான நோய்கள் குணமாகின்றன

வாய்ப்புண் இருக்கிறவர்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாக இருக்கிறது. காலை மற்றும் மாலையில், நான்கு ஐந்து பச்சை வல்லாரை இலைகளை மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் சரியாகிறது

குடல் புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது

வல்லாரை கீரை பொடியில் பல் துலக்குவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்குவது மட்டுமல்லாமல், பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன

ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை கீரையை தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது. வல்லாரையில் தோசை, சட்னி, சூப் என வகை வகையாக செய்து சாப்பிடலாம்

வல்லாரையில் நிறைந்துள்ள சத்துக்கள் மூளையை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கிறது

தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி, உடல் எரிச்சல், மூட்டு வலி, சிறுநீர் மஞ்சள் நீறமாக போவதை வல்லாரை சரி செய்கிறது

வல்லாரை இலைகளை நிழலில் நன்றாக காயவைத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை தினமும் தூங்குவதற்கு முன் பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து விடுகின்றன. கூடுதலாக, மலச்சிக்கல்லை போக்குவதோடு வயிற்றுப்புண், குடல்ப்புண் ஆகியவற்றை சீர் செய்கிறது.

தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இம்புட்டு நன்மைகளா..இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

கண்களில் பிரச்சனை உள்ளவர்கள், ஒரு கைப்பிடி வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாப்பிடவேண்டும். பின்னர், பசும்பால் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், கண் எரிச்சல், கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சனைகள் சரியாகிறது

வல்லாரை கீரையுடன் இரண்டு பாதாம் பருப்பை சேர்த்து தினமும் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெருவதுடன் குரல் இனிமையாக மாறுகிறது

கீரையுடன் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வருவதால் உடல் சூடு குறைகிறது

வல்லாரையுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து, தினசரி ஒரு நெல்லிக்காய் அளவில் எடுத்துக்கொண்டால் சருமத்தில் ஏற்படும் சொறி, எரிச்சல், சரும பிரச்சனைகள் குணமாகிறது

வல்லாரை சாற்றுடன் நல்லெண்யை சேர்த்து பக்குவமாக காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை தினசரி தலையில் தடவி வருவதால் முடி அடர்த்தியாக வளரும்

வல்லரை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் ஏற்பட்ட இடங்களில் கட்டி வருவதால் வீக்கம் விரைவில் குறையும் வாய்ப்புகள் உள்ளது.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த வல்லாரை கீரையை அன்றாடம் பயன்படுத்தும் உணவான இட்லி பொடியில் சேர்த்து வல்லாரை கீரை இட்லி பொடியை தயாரித்துள்ளது gsspecialfood.com 

சாதாரணமாக இட்லிப் பொடி என்பது மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு மற்றும் எள் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு அரைக்கப்படும் கலவை இட்லிப் பொடியாகும். இட்லிப் பொடி இட்லி மட்டுமின்றி, தோசை மற்றும் பிற தென்னிந்திய உணவு வகைகளுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் இட்லிப் பொடியானது, நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா , சீரகம், காய்ந்த மிளகாய், கல் உப்பு, பெருங்காய தூள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யலாம். அவ்வாறு செய்யும்போது இவற்றுடன் வல்லாரையை அதிகப்படியாக சேர்த்து செய்ததுதான் இந்த வல்லாரை கீரை இட்லி பொடி.

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சுவைத்து ஆரோக்கியம் பெறலாம்.

இந்த அற்புதமான வல்லாரை கீரை இட்லிபொடியை 100 கிராம் 70 ரூபாய்க்கு தருகிறோம். வல்லாரை கீரை இட்லி பொடி 100 கிராம் 70 ரூபாய், கொரியர் சார்ஜ் 20 ரூபாய் மொத்தம் 90 ரூபாய்

மேற்கண்ட பொருள்கள் தேவைப்படுபவர்கள், 75501 99561 என்ற மொபைல் எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்பி அதற்குறிய தொகையை ஜி பே, போன் பே போன்ற ஆப் மூலம் அனுப்பி, தங்களது முகவரியுடன் அனுப்பிவைத்தால் மேற்கண்ட பொருள் உங்கள் வீட்டிற்கு கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும்.