விஷால் இயக்குனர் ஹரியுடன் இணைந்து தன்னுடைய 34வது படத்தில் நடித்து வருகிறார். ஹரி படம் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை கட்டிப்போடும் அளவிற்கு இருக்கும்.
விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தார். படம் மக்கள் மத்தியில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது.
பிரபலங்களுடன் கூட்டணி வைத்து நடித்தால் படம் ஹிட் ஆகும் என்று என்ணுகிறார் விஷால், இதன் காரணமாக, விஷாலின் புதிய படத்தில் மேலும் இரண்டு பிரபலங்களை இணைத்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது. கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே ஹரியின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த யானை படத்திலும் பிரியா பவானி சங்கர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே விஷாலை வைத்து பூஜை மற்றும் தாமிரபரணி போன்ற ஹிட் படங்களை கொடுத்த ஹரி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்திருக்கிறார். அதனால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
இதன் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் விஷால் 34ல் விஷால் மூன்று இயக்குனர்களுடன் ஒரே நேரத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமான புகைப்படங்களை விஷால் தன்னு டைய வலைதளபக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இதே கூட்டணி அடுத்த வருடமும் இணையும் என்பது மாதிரியான ஒரு ஹிண்டையும் கொடுத்திருந்தார் விஷால். ஒரு வேளை துப்பறிவாளன்2 படத்தில் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இணைவார்களா என்ற சந்தேகத்தை விஷாலின் இந்த பதிவின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறது.