தமிழில் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை சோனா. சிவப்பதிகாரம் படத்தில் அமைந்த ‘மன்னார்குடி கமகமக்க’ பாடலில் கவர்ச்சி நடனத்தில் அனைவரையும் கவர்ந்தவர்.
அந்தப் பாடல் மூலம் பிரபலமடைந்து தொடர்ந்து பல படங்களில் ஐட்டம் நடனத்தை ஆடிய சோனா ஒரு கட்டத்தில் கவர்ச்சியான கேரக்டர் ரோலிலும் அசத்தினார். சோனா என்றாலே கவர்ச்சி நடிகைதான் என்று அறியப்பட்டார்.
அதனாலேயே சினிமாவிலிருந்து சிறிது நாள்கள் ஒதுங்கியிருந்தார். திடீரென சீரியலில் தலை காட்ட ஆரம்பித்தார். இருந்தாலும் கவர்ச்சி நடிகை என்ற அடைமொழி அவரிடமிருந்து விலகிய பாடில்லை, இதனால் வெறுத்துப் போனார் சோனா.
ஒரு நாள் சோனாவின் கதையை தொடர் கதையாக எழுத ஒரு நாளிதழ் முன்வர அந்த நாளிதழில் தொடர் கதையாக வெளியானது. அதன் பின் அந்த தொடர் கதையை புத்தகமாக வெளியிடலாம் என்ற ஐடியாவும் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் செய்ய சோனா முன்வந்தார்.
அதன் விளைவு ஏன் இதை ஒரு வெப் சீரிஸாக எடுக்கக் கூடாது என்று சோனா நினைக்க இப்பொழுது அவரது பையோபிக்கை சோனாவே எழுதி இயக்கியிருக்கிறார். அந்த வெப் சீரிஸுக்கு ‘ஸ்மோக்’ என்ற தலைப்பையும் சோனா கொடுத்திருக்கிறார்.
இந்த சீரிஸ் மூலம் தன் வாழ்க்கையில் நடந்த நிறை குறைகள் என அனைத்தையும் சொல்ல இருக்கிறேன் என்று கூறினார்.
அதில் நிருபர் ஒருவர் இந்த வெப் சீரிஸில் உங்கள் வாழ்க்கையில் அரசியல் தலைவர்களின் குறுக்கீடு எதுவும் இருந்து அதை பற்றி சொல்லியிருக்கிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு சோனா அரசியல் தலைவர்களோ அல்லது சினிமா பிரபலங்களோ என யாரும் இது வரை என்ன அந்த வகையில் அப்ரோச் செய்ய வில்லை. என் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை என்ன நடந்தது என்பதை இதன் மூலம் சொல்ல இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.