நயன்தாரா என்றாலே சர்ச்சைகள் அதிகம், அதிலும் குறிப்பாக நயன்தாரா காதல், திருமணம் முதல் குழந்தை பிறப்பு வரை அனைத்து செய்திகளையும் வதந்தி என்று நயன்தாரா தரப்பு கூறிவந்தாலும், கடைசியில் அந்த வதந்திகள் உண்மையான செய்தியாக மாறியதால், நயன்தாரா பற்றிய வதந்திகளை ரசிகர்கள் உண்மை செய்தியாகவே பார்க்கத் துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் தற்போது நயன்தாரா சென்னையில் மிகப் பழமையான தியேட்டரை விலைபேசுவதாகவும், சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது, ஆனால் அதை நயன்தாரா தரப்பு வதந்தி என்று கூறினர்.
ஆனால் சில நாட்களில் நயன்தாராவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, தியேட்டர் வாங்கியதாக வந்த செய்தி பொய், பேச்சுவார்த்தை நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
முதலில் வதந்தி என்று கூறியவர்கள், பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று, அடுத்த பேட்டியில் கூறியிருப்பதால், உண்மையில் நயன்தாரா தியேட்டரை வாங்கவிருப்பதாகவும், தியேட்டர் நிர்வாகம் கேட்ட விலை படியாததால் இழுபறியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பிரச்சனை ஆரம்பத்திலிருந்தே ஒருசில தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஏதாவது ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கும் முடிவில் நயன்தாரா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
படங்களில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் நயன்தாரா, அந்த வகையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வருகிறார்.
ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கி தன் படங்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் சென்னையில் திரையரங்கை வாங்கும் முனைப்பில் முழுமூச்சாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது விக்னேஷ் சிவன் பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பிசியாக இருப்பதால் சில நாட்களில் இதுகுறித்து செய்திகள் வெளிவரும் என்று கூறுப்படுகிறது.
இதற்கிடையே சென்னையில் முக்கிய இடத்தில் தனக்கான சொந்த வீட்டை மிக பிரம்மாண்டமாக கட்டும் முடிவில் நயன்தாரா இருப்பதாகவும், தியேட்டரை வாங்கி அதை வீடாக மாற்றும் முயற்சியில் நயன்தார இருப்பதாகவும் புதியதாக ஒரு செய்தி வலம் வருகிறது.
எது எப்படியோ....
சொந்தமாக தியேட்டர் அல்லது ஆடம்பர பங்களா ஏதோ ஒன்றை கட்டும் முழு முனைப்புடன் நயன்தாரா இருப்பதாகவும், கூறப்படுகிறது.