logo
home Product ஏப்ரல் 08, 2021
விஜய் ஓட்டி வந்த சைக்கிளை தேடும் ரசிகர்கள், விற்பனைக்கு தயாராகும் சைக்கின் நிறுவனம்
article image

நிறம்

நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சைக்கிளின் விலை எவ்வளவு, அதை எங்கு வாங்க முடியும் என்பது குறித்து ரசிகர்கள் இப்போதே இணையத்தில் தேட துவங்கிவிட்டனர்.

அந்த வகையில், நடிக விஜய் வாக்களிக்க வந்த வீடியோ இணையத்தையே கலக்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் பலரும், விஜய் ஓட்டி வந்த சைக்கிள் என்ன  என்பது குறித்து இணையத்தில் தேட துவங்கிவிட்டனர்.

விஜய் ஓட்டி வந்த சைக்கிள், கடந்த 2019-ஆம் ஆண்டு மான்ட்ரா நிறுவனம் வெளியிட்ட மெட்டல் என்ற மொடல் சைக்கிள் ஆகும்.

16 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிள், கையாள்வதற்கு எளிதாக இருக்கும்.

இந்த சைக்கில் 16 கிலோ மட்டுமே எடை கொண்டது. விஜய் இந்த சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார்.

அதற்கு காரணம், சைக்கிளில் இருக்கும் கியர் அமைப்பும் தான், இந்த சைக்கிளில் 24 ஸ்பீடு கியர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், எளிதாக கியர் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லோகன் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண சாலைகள் மட்டுமின்றி, மழை நேரத்திலும், தண்ணீர் படர்ந்த நிலப்பரப்பிலும் சிறப்பான நிறுத்துதல் திறனை இந்த பிரேக் சிஸ்டம் வழங்கும்.

மவுன்டெயின் பைக் என்ற ரகத்தில் குறிப்பிடப்படும் இந்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மொடல் ஆனது, 22,800 ரூபாயில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் ஓட்டிவந்த சைக்கிள் மாடலை ரசிகர்கள் தேடி வருவதாக கூறப்படுவதால், விற்பனையை அதிகரிக்க சைக்கிள் நிறுவனம் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.