logo
home Product ஏப்ரல் 08, 2021
சிறை செல்வாரா ராதிகா, சரத்குமார், போலி செக் மோசடி வழக்கு எதிரொலி
article image

நிறம்

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரேடியன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்திடம் கடந்த 2014-ம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தனர்.

 ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் பணத்தை திருப்பி தருமாறு கோரிய நிலையில்,

மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான 2 காசோலையும்,

சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் மதிப்புள்ள 5 காசோலையும் வழங்கப்பட்டது.

ஏழு காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விடவே ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில 7 காசோலை மோசடி வழக்குகள் தொடரப்பட்டது.

சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விவாரித்து (7.4.2021)  உத்தரவை பிறப்பித்துள்ளது.

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு வழக்கில்  சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும்,மற்ற 5 வழக்கில் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்

முதலில் இந்த வழக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது, பின்னர், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பின்போது நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

நடிகை ராதிகா சரத்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தன்னை வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

மேலும் மேஜிக் ப்ரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கும் நீதிமன்றம் ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பின்படி சித்தி நடிகை ராதிகா, சரத்குமார் சிறை சென்று கம்பி எண்ணுவார்களா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தபோது, “இந்த சிறை தண்டனை உடனடியாக நிறைவேறாது எனவும், மேல்முறையீடு செய்யப்படும் போது இடைக்கால தடை பெறும் வாய்ப்பு உள்ளது”என்று  வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.