logo
home Product ஏப்ரல் 08, 2021
சாதனை படைக்குமா சுல்தான்....? சுல்தான் படக்குழுவினரின் பேட்டி
article image

நிறம்

ரவுடிசத்தை தனது தொழிலாகவே கொண்டுள்ள நெப்போலியனுக்கு மகனாக பிறக்கிறார் கார்த்தி, பிரசவத்தின் நேரத்தில் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்ததால், தன் தாயை தனது பிறப்பிலேயே கார்த்தி இழக்கிறார்.

தாயில்லாமல், 100 அடியாட்களிடம் வளரும் கதாநாயகன், அவர்கள் அனைவரையும் தனது சொந்த அண்ணனாக பார்க்கிறார். வெளிநாட்டில் வேலை செய்து வரும் கார்த்தி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வருகிறார்.

அதே சமையத்தில் தனது கிராமத்தை வில்லன் ஜெயசீலனிடம் இருந்து, காப்பாற்றி தரவேண்டும் என்று நெப்போலியனிடம், விவசாயியாக நடிக்கும் பொன்வண்ணன்  கேட்க, காப்பற்றி தருகிறேன் என்று நெப்போலியனும் வாக்களிக்கிறார்.

இதன்பின், போலீஸ் அதிகாரியின் மூலம் கார்த்தியின் வீட்டிற்குள் Food Delivery ஆட்களாக பூகுந்து, நெப்போலியன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு துப்பாக்கி சூடு நடக்கிறது. இதனால் ரவுடி கூட்டத்தில் நான் இருக்கமாட்டேன் என்று ஊரைவிட்டு கார்த்தி கிளம்பும் நேரத்தில், அந்த மனவருத்தத்தில் உயிரை விடுகிறார் நெப்போலியன்.

இதனால் தனது தந்தைக்கு பிறகு, தன்னை தூக்கி வளர்ந்த அண்ணன்களை பார்த்துக்கொள் வேண்டும் என்று, போலீஸ் அதிகாரியிடம் சென்று, 100 போரையும் திருத்த 6 மாதம் அவகாசம் கேட்கிறார் கார்த்தி.

ஆனால் தனது தலைவன் நெப்போலியன், கிராமத்தை காப்பற்றி தருவேன் என்று விவசாயின் பொன்வண்ணனிடம், கொடுத்த வாக்கை காப்பாற்ற கார்த்தியிடம் பொய் சொல்லி, பொன்வண்ணனின் ஊருக்கு, கார்த்தியின் சில ரவுடிகள் கிளம்புகிறார்கள். அவர்களுடன் உண்மையை அறியாமல் கார்த்தியும் செல்லுகிறார்.

அந்த ஊருக்கு சென்றபின் சில அசபாவிதங்கள் நடக்க, கார்த்திக்கு அனைத்து உண்மைகளும், தெரியவருகிறது. அதன்பின் எப்படி அந்த கிராமத்தை வில்லனிடமிருந்து கார்த்தி காப்பாற்றுகிறார், அங்கு சந்திக்கும் தனது காதலியை எப்படி கரம்பிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.

நடிகர் கார்த்தி

இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர்.

இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதை கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆர்.-ன் குணத்தை பின்பற்றி வருகிறார்.

காமராஜ், சென்றாயன், என்று ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி. அர்ஜெயின் ‘தலையா’ கதாபாத்திரத்தை அனைவரும் ரசிக்கிறார்கள்.

இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்.

இப்படத்தை திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புக் கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் கார்த்தி.